தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.!

தமிழகத்தில் ஒரே நாளில் 4862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 688 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 2481 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, கானா ஆகிய 3 நாடுகளில் இருந்து வந்த 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பெருந்தொற்றுக்கு 9 பேர் பலியான நிலையில், 16 ஆயிரத்து 577 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments