பைக் மீது ஆம்னி பேருந்து மோதி 2 பேர் பலி
Mar 16, 2026
முகப்பு
ஒடிசாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு
Mar 16, 2026 06:33 AM
45
ஒடிசாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அரசு நடத்தி வரும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஐசியு வார்டில் அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர். மருத்துவமனை பணியாளர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட போது, புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர்களில் 11 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, தீ விபத்தில் காயமடைந்ததால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், யாரேனும் குற்றமிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu