அமீரக கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
Mar 11, 2026
தமிழ்நாடு
மாதவரம் - சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் நிரப்பும் பணி
Mar 11, 2026 12:38 PM
20
மாதவரம் - சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் நிரப்பும் பணி
சென்னை மாதவரத்தில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் எல்.பி.ஜி கேஸ் பங்கில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் சட்ட விரோதமாக கேஸ் நிரப்பியதால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் அங்கு திரண்டனர்.
வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியை பயன்படுத்தி 929 ரூபாய் விலை உள்ள சிலிண்டருக்கு ஆயிரத்து 150 ரூபாய் பணம் வசூலித்து மாதவரம் எல்பிஜி சென்டரில் கேஸ் நிரப்பியுள்ளனர்.
தகவலறிந்து காவல் துறையினர் அங்கு வந்ததும் ஆட்டோ எல்பிஜி கேஸ் சென்டரின் ஊழியர் மற்றும் உரிமையாளர் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu