மாவட்டம்
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளத்தில் நண்பர்களுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Mar 10, 2026 11:44 AM
11
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை குளத்தில் நண்பர்களுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த பாலச்சந்துரு என்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குளத்திலுள்ள வழுக்குப்பாறையின் மீது நின்றபடி புகைப்படம் எடுத்தபோது, கால் இடறி பாலச்சந்துருவும் பாலாஜி என்பவரும் நீரில் விழுந்துள்ளனர்.
நீச்சல் தெரியாத இருவரும் உயிருக்குப் போராடியபோது, அங்கிருந்தவர்கள் கம்பு ஒன்றை நீட்டவே, அதனைப் பிடித்து பாலாஜி கரை சேர்ந்துள்ளார். பாலச்சந்துரு தத்தளித்தபடியே ஆழமான பகுதிக்குச் சென்றதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu