ஹைதராபாத்தில் போலி நெய் தயாரிப்பு மோசடி அம்பலம்
Mar 10, 2026
இந்தியா
ஹைதராபாத்தில் போலி நெய் தயாரிப்பு மோசடி அம்பலம்
Mar 10, 2026 01:32 AM
20
ஹைதராபாத்தில் போலி நெய் தயாரிப்பு மோசடி அம்பலம்
ஹைதராபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில், போலி நெய் தயாரிப்பு மோசடி அம்பலமானது. போலி நெய் தயாரிப்பதற்காக, மலிவான ரசாயனப் பொருள்கள் கலக்கப்பட்ட பசு மற்றும் எருமை மாட்டின் பாலில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 3000 கிலோ கிரீமை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த பால் பண்ணையில் போலீசார் நடத்திய சோதனையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. போலி நெய்யில், பாமாயில் மற்றும் வனஸ்பதியும் கலக்கப்பட்டிருந்தது சோதனையில் தெரியவந்தது.
ஹைதராபாத்தில், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரைட் டெய்ரி என்ற தொழிற்சாலையில் சோதனை நடத்திய போலீசார், 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்து, மோசடியில் ஈடுபட்டதாக முகமது ஜுனைத் உசேன் என்பவரையும் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu