சற்றுமுன்
அதிபர் டிரம்ப்பின் 15 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட உருவச் சிலையை உரியவர்கள் இடம் ஒப்படைக்க சிற்பி மறுப்பு
Mar 05, 2026 12:32 PM
33
அதிபர் டிரம்ப்பின் 15 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட உருவச் சிலையை உரியவர்கள் இடம் ஒப்படைக்க சிற்பி மறுப்பு
அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிற்பி, அமெரிக்க அதிபர் டிரம்பின் 15 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட அலங்கார சிலையை உரியவர்கள் வசம் ஒப்படைக்க மறுத்துவிட்டார்.
இது பற்றி பேசிய சிற்பி ஆலன் கோட்ரில், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் குழு தம்மை அணுகி சிலையை உருவாக்கக் கோரியதாக தெரிவித்தார். குழுவினர் யோசனைப்படி, பிரச்சாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது டிரம்ப் எழுந்து நின்று கையை உயர்த்தி காட்டியது போன்று சிலை வடிவமைக்கப்பட்டது என்றார்.
சிலையை டிரம்ப்பே திறந்தவைக்க உள்ளதாக கூறியதால் ஒரு வாரத்தில் பணியை முடித்ததாக ஆலன் கோட்ரில் கூறினார். ஆனால் சிலை வடிவமைப்பு தொகையில் 90 ஆயிரம் டாலர் நிலுவை வைத்ததால் சிலையை ஒப்படைக்கவில்லை என்று தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu