தமிழ்நாடு
தஞ்சையில் பச்சைத் துண்டுடன் விஜய் உரை
Mar 04, 2026 06:13 AM
36
தஞ்சையில் பச்சைத் துண்டுடன் விஜய் உரை
தமிழ்நாடு தான் விஜய் என்று ஏன் சொன்னேன் என்றால், தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதியாக நாம் இருப்பதால் அவ்வாறு கூறினேன்
மக்களை பயமுறுத்தி, பயமுறுத்தி இனி திமுகவினார் ஏமாற்ற முடியாது; நான் சொல்வதை திரித்து தில்லுமுல்லு செய்கின்றனர்
ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி என்று சிறு பிள்ளைகள் கூட சொல்ல ஆரம்பித்து விட்டனர்
தேர்தலில் தமிழ்நாடு அணி, டெல்லி அணி என்கிறார்கள்; கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை, டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது
வருகிற சட்டமன்ற தேர்தலில் எல்லா அணியும் உடைந்து நொறுங்கும்; TVK அடித்து நொறுக்கும்
தமிழ்நாட்டு மக்களுக்கும் எனக்குமான உறவு என்பது, குடும்ப உறவு போன்றது; மற்றவர்களுக்கு இது Election: எனக்கு இது Emotion
ஊழலற்ற சமூக நீதி ஆட்சி அமைக்க அனைவரும் ஆதரவு தர வேண்டும்; விஜய்க்கு ஒரு வாய்ப்புத் தர வேண்டும்
எனக்கு விவசாயம் பற்றி தெரியாது; இருப்பினும் நானும் டெல்டாகாரன் என உங்கள் காதில் டால்டா ஊற்ற வரவில்லை - விஜய்
உலகத்தை படைத்த கடவுளுக்கு படையல் போடுவார்கள்; ஆனால், கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள் விவசாயிகள்
நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டிய மதிப்பிற்குரியவர்கள் விவசாயிகள்; அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் - விஜய்
நிலத்தடி நீரை பாதுகாக்காமல் விட்டதால் தான் இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தண்ணீரை பஞ்சம் ஏற்பட போவதாக கூறுகிறார்கள் - விஜய்
பெரிய, பெரிய திட்டங்களை ஆட்சியில் இருக்கும்போது திமுகவினர் செய்யமாட்டார்கள்; ஆட்சி முடியும் தருவாயில் தொடங்கி வைப்பார்கள் - விஜய்
ஆட்சி முடியும் தருவாயில் பெரிய, பெரிய திட்டங்களை வெறுமனே ஆரம்பித்து வைத்து, திமுக ஆட்சியாளர்கள் ஏமாற்றுகின்றனர் - விஜய்
ஒருவன் அமைதியாக இருப்பதால், அவனுக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடாதீர்கள்; எங்களுக்கும் விவரம் தெரியும் - விஜய்
ஒரு அணையில் ROV எந்திரம் மூலம் தண்ணீருக்குள்ளேயே சென்று, ஆராய்வது வரை எங்களுக்கும் எல்லாம் தெரியும் - விஜய்
மீனவர்கள் மீது யாரும் கையே வைக்க கூடாது; தவெக ஆட்சியில், யாரும் மீனவர்கள் மீது கைவைக்க விடமாட்டோம்; பாதுகாப்போம் - விஜய்
மீனவர் பிரச்சினையில் வெறுமனே கடிதம் எழுதுவது மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு வாடிக்கை; அத்தோடு மீனவர்கள் மறந்துவிடுவார்கள்
திமுக 2ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது சரித்திரம் கிடையாது; அவரது அப்பாவாலேயே(கருணாநிதி) முடியவில்லை - விஜய்
திமுக, அதிமுக கைகோர்த்து என்னை எதிர்க்கின்றனர்; விஜய் வந்ததால் நமது பிழைப்பு போய்விட்டதே என புலம்புகின்றனர்
ஜனநாயகன் திரைப்பட விவகாரத்திற்கு, பட்டும்படாமல் குரல் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட எல்லோருக்கும் நன்றி - விஜய்
ஒவ்வொரு கூட்டத்திற்கும் SOP போட்டு விஜய்யை தடுத்தே ஆக வேண்டும் என, திமுகவும், அதிமுகவும் கைகோர்த்து செயல்படுகின்றனர் - விஜய்
தென் மாவட்டத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்க ஸ்டாலின் முயற்சி செய்தார்; மக்கள் பணத்தில் அதை வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் கூறியது
கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறியது எப்படி என்றால்,
ஊரான் விட்டு நெய்யிலே உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க என்று அர்த்தம்
நெல்லும், கரும்புக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தருவோம் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்; ஆனால், நிறைவேற்றினாரா?
தவெக ஆட்சிக்கு வந்தால், 5 ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயிகளின் வேளாண் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் - விஜய்
2 ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயிகள், நிலமற்ற விவசாயிகளின் பிள்ளைகளின் மருத்துவம், பொறியியல் படிப்பு செலவை தவெக ஆட்சி ஏற்கும்
தவெக ஆட்சிக்கு வந்தால், 5 ஏக்கருக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் பயிர்கடனை 50 சதவீதம் தள்ளுபடி குறித்து பரிசீலனை - விஜய்
ரேஷன் கடைகளில், பொருட்கள் பாக்கெட் செய்து விற்கப்படும்; ரேஷனில், இருபால் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர் - விஜய் வாக்குறுதி
நாங்கள் தான் அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்பவர்கள், நாங்கள் ஊழல் செய்யாதவர்கள் என்றும்; ஊழல் செய்ய மாட்டோம் என சொல்ல முடியுமா?
நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் என சொல்ல முடியும்; ஆண்ட, ஆளும் ஆட்சியாளர்களால், சொல்ல முடியுமா? - விஜய்
நாங்குநேரி கொலை சம்பவத்தை திமுக ஆட்சியாளர்கள் தடுக்க தவறி விட்டார்கள்; ஸ்டாலின் தொடரட்டும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும் என்பது தான் நிஜம்
கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.100 என்ன ஆனது; கரும்புக்கு ஆதரார விலை ரூ.4000 என்ன ஆனது
திருமணம் ஆகாத பெண்களக்கு அரசு வேலை எனும் திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? - விஜய்
நிறைவேற்றவே முடியாது என்றும் தெரிந்தும் திமுக வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனும் வாக்குறுதி என்ன ஆனது? - விஜய்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu