புதிய கட்சி தொடங்கினார் சசிகலா...
Feb 24, 2026
உலகம்
பிவிண்டி தேசியப் பூங்காவில் சிம்பன்சிகள் கணக்கெடுப்பு
Feb 25, 2026 04:20 AM
10
பிவிண்டி தேசியப் பூங்காவில் சிம்பன்சிகள் கணக்கெடுப்பு
உகாண்டாவின் பிவிண்டி தேசியப் பூங்காவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 426 சிம்பன்சிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
320 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பூங்கா, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும், உகாண்டாவின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. அழிந்துவரும் விலங்கினமான சிம்பன்சியின் சரணாலயமாகவும் உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உகாண்டாவின் வனவிலங்கு ஆணையம் இந்த ஆய்வை நடத்தியது.
அடர்ந்த வெப்பமண்டல காடுகளால் சூழப்பட்ட இந்தப் பூங்காவில் உள்ள சிம்பன்சிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பூங்காவில் சிம்பன்சிகள் தவிர, மலை கொரில்லாக்கள், யானைகள் உள்ளிட்ட விலங்குகளும் ஏராளமான உள்ளன.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu