தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
Feb 24, 2026
தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து
Feb 24, 2026
மாவட்டம்
வீட்டில் வளர்த்த நாய் குட்டி கடித்தவர் 'ரேபிஸ்' பாதிப்பால் உயிரிழப்பு
Feb 24, 2026 05:35 AM
19
வீட்டில் வளர்த்த நாய் குட்டி கடித்தவர் 'ரேபிஸ்' பாதிப்பால் உயிரிழப்பு
திருமயம் அருகே வளர்ப்பு நாய் கடித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்த மின்வாரிய ஊழியர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
53 வயதான ராமலிங்கத்தை அவர் வீட்டில் வளர்த்த நாய் குட்டி 5 மாதங்களுக்கு முன் கடித்துவைத்தது.
10 நாட்களில் நாய் குட்டி இறந்த நிலையில், வழக்கம்போல் வேலைக்கு சென்று வந்த ராமலிங்கத்துக்கு 2 நாட்களுக்கு முன் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, கடந்த 5 மாதங்களாக அவரோடு நெருங்கி பழகிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என 20 பேர் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தெரு நாய் மட்டுமின்றி, வீட்டில் வளர்க்கும் நாய் கடித்தாலும் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்டால் மரணம் நிச்சயம் என எச்சரிக்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu