100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு பள்ளி
Feb 21, 2026
உலகம்
இசைக்கருவிகளாக மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஆயுதங்கள்
Feb 21, 2026 07:39 AM
10
இசைக்கருவிகளாக மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஆயுதங்கள்
மெக்சிகோ நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கைத் துப்பாக்கிகள், துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள் போன்றவை இசைக்கருவிகளாக மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெட்ரோ ரெய்ஸ் (Pedro Reyes) என்பவர், இசைக்கருவிகளாக உருமாற்றம் செய்யப்பட்டவற்றை மெக்சிகோ சிட்டியில் காட்சிப்படுத்தியதை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.
மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸ் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறை உச்சகட்டத்தில் இருந்தபோது, ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்படி பறிமுதல் செய்யப்பட்டவற்றில் சுமார் 7 ஆயிரம் ஆயுதங்களை இசைக்கருவிகளாக மாற்றும் பணியை, பிற இசைக் கலைஞர்கள் மற்றும் உலோகத் தொழிலாளர்களுடன் இணைந்து 2012-ஆம் ஆண்டு பெட்ரோ ரெய்ஸ் தொடங்கினார்.
ஆயுதங்களாக இருந்து இசைக்கருவிகளாக மாற்றப்பட்டவை, பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோ ரெய்ஸ் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu