பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் (53) காலமானர்.
Feb 20, 2026
உலகம்
மாறுவேடத்தில் மறைந்திருந்து கொள்ளையனை பிடித்த போலீசார்
Feb 20, 2026 08:28 AM
14
மாறுவேடத்தில் மறைந்திருந்து கொள்ளையனை பிடித்த போலீசார்
தாய்லாந்தில் தேடப்பட்டு வந்த தலைமறைவு கொள்ளையனை, காவல் துறையின் புலனாய்வுப் பிரிவினர் சிங்க நடனக் குழுவினர் போல் வேடமணிந்து சென்று மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இந்த மாதத் தொடக்கத்தில், தொடர்ந்து மூன்று நாள்கள் மூன்று போலீசாரின் வீடுகளில் கொள்ளையடித்ததாக 33 வயதான அடிசக் தனோபாஸ் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து பலமுறை தப்பிய அந்தக் குற்றவாளி, கோவில் கண்காட்சி ஒன்றுக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் கிபாவோ உடைகள் மற்றும் சிங்க நடனக் குழுவினர் போல் வேடமிட்டு ரகசியமாகக் காத்திருந்தனர். அப்போது, கண்காட்சிக்கு வந்த கொள்ளையனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu