பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் (53) காலமானர்.
Feb 20, 2026
பழனி கோயிலில் ரூ.2.70 கோடி உண்டியல் காணிக்கை
Feb 20, 2026
தமிழ்நாடு
சென்னை இசிஆரில் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கை
Feb 20, 2026 06:59 AM
9
சென்னை இசிஆரில் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கை
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்களை மே மாதத்துக்குள் விசாரித்து முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ள பங்களாக்கள், ரிசார்ட்டுகளுக்கு எதிராக மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து 440 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு, 6 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைக்கு வந்த நிலையில், மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக கட்டட உரிமையாளர்கள் விளக்கமளிக்க மார்ச் 31 வரை அவகாசம் அளித்து வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu