குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
உலகம்
ஈரான் மீது இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்?
Feb 19, 2026 09:30 AM
46
ஈரான் மீது இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்?
ஈரான் மீது இந்த வார இறுதியில் கடுமையான வான்வழித் தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில், ஏற்கெனவே ஒரு விமானம் தாங்கிக் கப்பலையும், 13 போர்க் கப்பல்களையும் அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
அத்துடன், ஏராளமான நவீன ரக போர் விமானங்கள், எரிபொருள் நிரம்பும் டேங்கர் விமானங்கள் போன்றவற்றையும் மேற்காசியாவுக்கு அனுப்பி வருகிறது.
இது தவிர கரீபியன் கடல் பகுதியில் இருந்து அமெரிக்காவின் மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் சென்றுகொண்டுள்ளது.
தாக்குதல் குறித்து அதிபர் டிரம்ப் தீவிர யோசனையில் இருப்பதாகவும், அவரது ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவை மொரீசியஸ் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டாம் என பிரிட்டனை அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக, அங்குள்ள ராணுவத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஈரான் தனது அணு ஆயுத திட்டங்களை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu