குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
தமிழ்நாடு
எஸ்.பி ஜெயக்குமார் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு.
Feb 19, 2026 07:15 AM
16
எஸ்.பி ஜெயக்குமார் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயக்குமாரின் பெயர், புகைப்படத்தை பதிவிட்டு, மர்மநபர் தொடங்கியிருந்த போலி முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அந்த முகநூல் கணக்கை ஜெயக்குமார் தான் தொடங்கி உள்ளார் என நினைத்து அவரது நண்பர்கள் பலர் பின் தொடர்ந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரிடம் அந்த கணக்கு தொடங்கிய நபர், எஸ்.பி ஜெயக்குமார் கூறுவது போல், தனது நண்பர் ஒருவர் பேசுவார் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த நபர், எஸ்.பி ஜெயக்குமாரின் நண்பருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை ராணுவ வீரர் என்றும் பணி மாறுதல் ஆனதால், வீட்டிலுள்ள பொருட்களை குறைந்த விலைக்குத் தருவதாகவும் கூறியுள்ளார்.
மர்ம ஆசாமி முன்பணமும் கேட்கவே, உஷாரான எஸ்.பி ஜெயக்குமாரின் நண்பர், நேரடியாக ஜெயக்குமாருக்குப் போன் செய்து விஷயத்தைக் கூறியதையடுத்து போலி ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu