சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
சுவாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
Feb 18, 2026
தமிழ்நாடு
கோவை மக்கள் குறித்து தயாநிதி மாறன் அவமரியாதையாக பேச்சு - அண்ணாமலை
Feb 18, 2026 09:38 AM
16
கோவை மக்கள் குறித்து தயாநிதி மாறன் அவமரியாதையாக பேச்சு - அண்ணாமலை
கரூரில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் கோவை மக்கள், பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள் என்று தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் அவமரியாதையாகப் பேசியதாக குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, அவர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த வீடியோவை பகிர்ந்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தயாநிதி மாறன் பேசியதை கேட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்துக் கொண்டிருந்ததாக கூறினார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் போல, கோயம்புத்தூர் மக்களும், தங்கள் கடின உழைப்பால், தமிழகத்துக்கும், நாட்டிற்கும் பொருளாதார பங்களிப்பை அளித்து வருவதாக கூறிய அண்ணாமலை, தி.மு.க.வினர் தவிர மற்ற தமிழக மக்கள் யாருமே, தமிழகத்தைச் சுரண்டிக் கொழுக்க நினைப்பதில்லை என்றார்.
தி.மு.க.வினரின் இந்த ஆணவத்தால்தான், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதி மக்களும், அக்கட்சியை புறக்கணித்து வருவதாகவும், வரும் தேர்தலில், தமிழகம் முழுவதுமே தி.மு.க.வுக்கு அதே நிலைதான் ஏற்படும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu