RECENT NEWS

சென்னையில் பார்க் நட்சத்திர விடுதியில் பெண் வழக்கறிஞர் சடலமாக மீட்பு

சென்னையில் பார்க் நட்சத்திர விடுதியில் பெண் வழக்கறிஞர் சடலமாக மீட்பு

Feb 17, 2026

சென்னையில் பார்க் நட்சத்திர விடுதியில் பெண் வழக்கறிஞர் சடலமாக மீட்பு

சென்னையில் பார்க் நட்சத்திர விடுதியில் பெண் வழக்கறிஞர் சடலமாக மீட்பு

Feb 17, 2026

முகப்பு

🔴LIVE: இடைக்கால பட்ஜெட் 2026-27 | TN Interim Budget 2026–27 | Thangam Thenarasu | CM MK Stalin

Feb 17, 2026 04:19 AM

162

🔴LIVE: இடைக்கால பட்ஜெட் 2026-27 | TN Interim Budget 2026–27 | Thangam Thenarasu | CM MK Stalin

இடைக்கால பட்ஜெட் 2026-27

தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்

தஞ்சையில், ஈரோடு, ராமநாதபுரம், சென்னையில் 285 கோடி ரூபாயில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன - தங்கம் தென்னரசு

ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும் - தங்கம் தென்னரசு

இலங்கை தமிழர்களுக்கு உதவித்தொகை உட்பட பல திட்டங்களுக்கு மொத்தம் ரூ.456 கோடி செலவிடப்பட்டுள்ளது - தங்கம் தென்னரசு

ரூ.630 கோடி மதிப்பில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டம் - தங்கம் தென்னரசு

ரூ.197 கோடியிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது வழங்கப்பட்டது - தங்கம் தென்னரசு

''மகளிர் உரிமைத் திட்டம் வரும் மாதங்களிலும் தடையின்றி தொடர ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 செலுத்தப்பட்டது''

எதிர்கால வரும் தடைகளை நிகழ் நேரத்தில் கணித்து மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது - தங்கம் தென்னரசு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 1.31 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ.6500 கோடி நிதி விடுவிக்கப்பட்டது - தங்கம் தென்னரசு

மகளிர் சுய உதவிக் குழுக்களில் 6.23 லட்சம் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 19 தோழி விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன

அரசு மருத்துவமனையில் நடைபெறும் பாதுகாப்பான பிரசவங்களில் நாட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது

பெண்களுக்கு நெருக்கடி நேரங்களில் உதவ காவலர் செயலி

தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது

நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% பெண்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

காலை உணவுத் திட்டம் பசியில்லாமல் மாணவர்கள் உற்சாகமாக பயில உதவுகிறது

காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான அன்புக் கரங்கள் திட்டத்தில் 10,637 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்

தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையங்களாக 25 அன்புச் சோலைகள் திறக்கப்பட்டுள்ளன

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி உயர்விலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் 3,632 பேர் நியமன உறுப்பினர்களாக பொறுப்பேற்பு

மாற்றுதிறன் உடையோர் உதவித் தொகை மூலம் 8.52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து சேவையும் வழங்கப்படுகிறது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,471 கோடி ஒதுக்கீடு

பேராசிரியர் அன்பழகனார் திட்டத்தில் 3,721 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன

ஆசிரியர்கள் நலம் பேண முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது

சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு

முதியோர் & மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தில் 27,40,703 பயனாளிகள்

இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு

10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை 6.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பொறியியல் கல்லூரியில் திறன் மையங்கள் உருவாக்க நடவடிக்கை

கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர்

உயர்கல்வி சேர்க்கையில் 47 சதவீதத்துடன் தமிழ்நாடு இந்தியளவில் முதலிடம்

உயர்கல்வித்துறைக்கு இடைகால பட்ஜெட்டில் ரூ.8,505 கோடி ஒதுக்கீடு

நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு 48.65 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 ஆண்டில் ரூ.101 கோடி அளவில் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,687 கோடி ஒதுக்கீடு

சென்னையில் உள்ள நீர் நிலைகளை ஒருங்கிணைத்து சமச்சீராக குடிநீர் விநியோகிக்க முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் - ரூ.3,109 கோடி ஒதுக்கீடு

நதிக்கரை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு

தொழில்நலத்துறை இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,996 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் ரூ.104 கோடியில் 30 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்படுகின்றன

நம்மை காக்கும் 48 திட்டம் இதுவரை 5,11,916 உயிர்களை காத்துள்ளது

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 1,086 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களின் மூலம் 17,82,687 பேர் பயனடைந்துள்ளனர்

புற்றுநோய் விழிப்புணர்வு கண்டறிதல் முகாம் மூலம் 79.17 லட்சம் பேருக்கு பரிசோதனை - அவர்களில் 1,929 பேருக்கு புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.22,090 கோடி ஒதுக்கீடு

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2.55 கோடி பயனாளிகளுக்கு முதல் முறை சேவைகள் 4.75 கோடி பயனாளிகளுக்கு தொடர் சேவைகள்

திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது

தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறையில் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், நெல்லை, குமரி, ஈரோடு, புதுக்கோட்டையில்
ரூ.388 கோடியில் மினி டைடல் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது

சென்னை தரமணியில் செமிகண்டக்டர் மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது

கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய முதன்மையான மையமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை

கப்பல் உற்பத்தி துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பது நோக்கமாகக் கொண்ட தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும்

கப்பல் கட்டும் தொழிலில் ஒரு உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்

தொழில் முதலீடு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 - 5 ஆண்டு செயல்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 5 மடங்கு உயர்வு

5 ஆண்டுகளில் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை விஞ்சியுள்ளது

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டை அறிவுசார் சொத்துரிமையின் தலைமையகமாக மாற்ற நடவடிக்கை

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.219 கோடி ஒதுக்கீடு

பாசன வசதிக்காக தூர்வாரும் பணிகள் ரூ.498 கோடியில் நடைபெறுகிறது

நீர்வளத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.10,076 கோடி ஒதுக்கீடு

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ரூ.1,618 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது

எரிசக்தித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.18,091 கோடி ஒதுக்கீடு

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கை கொண்ட ராம்சார் தளங்கள் உள்ளன

20 ராம்சார் தளங்களுடன் இந்தியாவில் அதிக ராம்சார் தளங்கள் தமிழகத்தில் உள்ளன

தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி நடைபெறுகிறது

சென்னையில் 250 உலகளாவிய திறன் மையங்கள் கோவை, மதுரை திருச்சியில் உருவாக்கப்பட்டு வருகின்றன

2024-2025ல் 32 மாவட்டங்களிலிருந்து தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி நடைபெறுகிறது

அலையாத்தி காடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் பசுமை பரப்பை உயர்த்த அரசு தொடர்ந்து நடவடிக்கை

பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் பசுமைப் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை

5 ஆண்டில் 100 புதிய பாதுகாக்கப்பட்ட காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

நீலகிரி ரேஸ்கோர்ஸ் பகுதியில் 52.34 ஏக்கர் பரப்பளவில் ரூ.70 கோடியில் பூங்கா அமைக்கப்படுகிறது

கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் 118 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்காவையும் அரசு அமைக்கிறது

புதிய சிற்றுந்து திட்டம் மூலம் 6303 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை வழங்கப்பட்டுள்ளது

போக்குவரத்து துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.13,062 கோடி ஒதுக்கீடு

விடியல் பேருந்து திட்டத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு

மாணவர்கள் பேருந்து பயண கட்டணம் திட்டத்திற்காக ரூ.1,782 கோடி, டீசல் மானியத்திற்காக ரூ.1,857 கோடி ஒதுக்கீடு

1,168 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன

முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு

பழங்குடியின மக்களின் குடியிருப்பு உள்கட்டமைப்பு மேம்பாடு - ரூ.300 கோடி ஒதுக்கீடு

பழங்குடியினர் வீடு கட்டுமான பணிகள் மேற்கொள்ள 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு ரூ.460 கோடி ஒதுக்கீடு

இந்த ஆட்சியில் ரூ.8,363 கோடி மதிப்பிலான 8,113 ஏக்கர் திருக்கோவில் நிலங்கள் மீட்பு

5 ஆண்டுகளில் 4,180 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது

5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்

அதிகம் அறியப்படாத 22 சுற்றுலாத்தலங்கள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன - பூம்புகார் நகரம் ரூ.22 கோடியில் புதுப்பிப்பு

சுற்றுலாத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,394 கோடி ஒதுக்கீடு.

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு

ராமநாதபுரம் தங்கச்சிமடம் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம், பாம்பனில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு அமைப்பு

குந்துக்கல் மீன்பிடி இறங்குதளம் 148 கோடி ரூபாயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

விலையில்லா மின்சாரம் மூலம் 1.60 லட்சம் விசைத்தறி நெசவாளர்கள் பயனடைந்து வருகின்றனர்

கைத்தறி துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,943 கோடி ஒதுக்கீடு

ரூ.758 கோடியில் பால் பண்ணைகள் நவீனமயமாக்கல்

கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது

வீட்டு வசதித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.7,547 கோடி ஒதுக்கீடு

பொதுப்பணித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,694 கோடி ஒதுக்கீடு

ரூ.471 கோடியில் 61 புராதன கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது

பல்வேறு தடைகளை கடந்து அரசு அலுவலர்கள், ஆசிரியர் நலன்களை காத்து வருகிறோம்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.11,000 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்காக 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய்

மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் 4135 முகாம்கள் நடத்தப்பட்டு 23.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன

கடந்த 5 ஆண்டுகளில் 2 புதிய காவல் ஆணையரங்கங்கள், 3 புதிய காவல் மாவட்டங்கள், 6 புதிய காவல் உட்கோட்டங்கள் உருவாக்கம்

கடந்த 5 ஆண்டுகளில் 81 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன

5 ஆண்டுகளில் 14,318 பேர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

கல்லூரி மாணவியர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் - 10,000 முகாம்கள் மூலம் 38.48 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

சென்னை, தாம்பரம், ஆவடி, மதுரை, திருச்சியில் சிசிடிவி கண்காணிப்பு திட்டங்களுக்கு ரூ.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது

போதைப் பொருட்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை

போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சிகிச்சை ஆலோசனை வழங்க 25 போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது

போதைப்பொருள் ஒழிப்பு - 4 லட்சம் மாணவர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்

காவல்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.17,111 கோடி ஒதுக்கீடு

கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.12,359 கோடி பயிர் கடன், ரூ.4,889 கோடி நகை கடன்,
ரூ.2,118 கோடி சுய உதவி குழு கடன் தள்ளுபடி

5 ஆண்டுகளில் பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கேட்டது ரூ.50,922 கோடி; கிடைத்தது ரூ.1,151 கோடி

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை

சென்னை மாநகராட்சியில் பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது

விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வறட்சி தடுப்பு பணிகள்

கிழக்கு , மேற்கு தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவு அபாயம் தவிர்க்க நடவடிக்கை

மாநில வளர்ச்சிக்கு கடன் பொருளாதாரம் முக்கியமானது

முன்னுரிமை துறைக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

பேரிடர் மேலாண்மை பணிக்கு தமிழக அரசு கூடுதலாக 9,160 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழ்நாட்டிற்கு சொற்பமான அளவில் தான் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கப்பட்டது

10.86 லட்சம் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு ரூ.12,078 கோடி செயலற்ற நிதிகள் கண்டறியப்பட்டன

செயலற்ற நிதிகள் முக்கிய உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நிதி வருவாய் பகிர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும்

தற்போதைய நிதிக்குழுவின் வரிப்பகிர்வு குறித்த பரிந்துரை ஏமாற்றம் அளிக்கிறது

0.44 சதவீதம் அளவிலேயே தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு அதிகரிப்பு

மாநிலங்களுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளாமல் வரிமுறையை மாற்றும் மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ஏமாற்றம் அளிக்கிறது

16வது நிதிக்குழுவும் தனது கடமையில் இருந்து தவறி உள்ளது

ஜிஎஸ்டி விகித மாற்றங்கள் மாநிலங்களின் நிதி நிலையில் மேலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்

ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்களால் தமிழ்நாட்டிற்கு ரூ.9,600 கோடி இழப்பு

தமிழ்நாட்டிற்கான வரிப்பங்கு குறைப்பால் 1202 கோடி ரூபாய் இழப்பு

நடப்பு ஆண்டில் 3,200 கோடியளவுக்கு எதிர்பாராத, கூடுதல் செலவுகள் எற்பட்டன

தமிழ்நாட்டின் சொந்த வரிவருவாய் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 540 கோடி

கணிக்கப்பட்டதை விட பொருட்கள் மற்றும் சேவைகளின் வரி வருவாய் குறைந்து விட்டது

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட செலவில் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை

2026-27ல் மாநில அரசின் சொந்த வரி வருவாய் 11.15 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

மத்திய அரசு பொறுப்பேற்ற திட்டங்களுக்கு கூட நிதியை விடுவிக்க மறுக்கிறார்கள்

தமிழக அரசின் செலவினங்கள் 3.78 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு

மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்காக 10,849 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ளது

நடப்பு நிதியாண்டில் அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2.20 லட்சம் கோடியில் இருந்து ரூ.2.06 லட்சம் கோடியாக குறைந்தது

வருவாய் பற்றாக்குறை ரூ.69,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது

2026-27ல் 48 ஆயிரம் கோடி ரூபாயாக வருவாய் பற்றாக்குறை குறையும் என மதிப்பீடு

மத்திய அரசு உரிய நிதியை விடுவித்திருந்தால் தமிழக அரசின் நிதி நிலைமை மேம்பட்டிருக்கும்

ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்ததே தமிழ்நாட்டின் வரி வருவாய் குறைந்ததற்கு காரணம்

2025-26ல் ரூ.9.52 லட்சம் கோடியாக கடன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

2026-27ல் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

ரூ.1.21 லட்சம் கோடியாக நிதி பற்றாக்குறை மதிப்பிடப்பட்டுள்ளது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இன்று போய் நாளை வா...” அண்ணாமலை கேள்வி அதிர்ந்த டி.ஆர்.பாலு.. காரணம் என்ன தெரியுமா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies