முகப்பு
பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8-க்குள் நுழைந்தது இந்திய அணி
Feb 16, 2026 01:38 AM
20
பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8-க்குள் நுழைந்தது இந்திய அணி
கொழும்பில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்க வீரர் இஷான் கிஷனின் அதிரடியான 77 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது.
176 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 114 ரன்களுக்குச் சுருண்டது.
இந்திய தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம், இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu