RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

முகப்பு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

Feb 01, 2026 11:27 AM

119

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் என்னென்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அரியவகை கனிமம் எடுப்பதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, கேரளாவில் புதிய வழித்தட திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் சென்னை - பெங்களூரு, சென்னை - ஐதராபாத் இடையே அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் உட்பட இந்தியாவின் 15 முக்கிய தொல்பொருள் தளங்கள் உலகத்தரம் வாய்ந்த கலாச்சார இடங்களாக மேம்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும் பொதிகை மலை, இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் டிரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் புதிய மரங்கள் நட திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல், நாட்டில் மாவட்டங்கள்தோறும் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பாலும் தமிழ்நாடு பலனடையும்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies