ஆன்மீகம்
தைப்பூசத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்
Feb 01, 2026 10:26 AM
139
தைப்பூசத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்
தைப்பூசத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். தைப்பூச விரதமிருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வந்த பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகனை வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலகுகுத்தியும், காவடி எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருத்தணி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
முருகனின் 6 ஆம் படை வீடான பழமுதிர்ச்சோலையில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு வைரவேல், தங்கக்கவசத்துடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu