முகப்பு
மாநிலங்களின் நிதி நிலைமை மாபெரும் சிக்கலில் உள்ளது - ரிசர்வ் வங்கி
Jan 25, 2026 11:43 AM
73
மாநிலங்களின் நிதி நிலைமை மாபெரும் சிக்கலில் உள்ளது - ரிசர்வ் வங்கி
நேரடி பண உதவித் திட்டங்களால் மாநிலங்களின் கடன் சுமை அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களில் நிதி நிலைமை சிக்கலில் உள்ளதாகவும், இது நீடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
மாநில அரசுகளின் பட்ஜெட், வருவாய், செலவு, கடன் அளவு, நிதி ஒழுங்கு முறை ஆகியவற்றைக் கண்காணித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அனைத்து மாநிலங்களின் நிதி பற்றாக்குறை, கடந்த நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, இலவச பஸ் பயணம், விவசாயத்துக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவற்றால், மாநிலங்களின் கடன் சுமை கணிசமாக அதிகரிப்பதாகவும், இதனால் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்க முடியாமல் போவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாகவே, மாநில அரசுகளின் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025-26-ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வாங்கிய கடன் அளவு முந்தைய ஆண்டைவிட 21 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu