சற்றுமுன்
மின்சாரம் பாய்ந்து தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு
Dec 02, 2025 02:34 AM
84
மின்சாரம் பாய்ந்து தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினிகுப்பம் கிராமத்தில் நர்சரி வைத்துள்ள ஜானகிராமன் மற்றும் அவரது இரு மகன்கள் விகாஷ், ஜீவா மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
நர்சரிக்கு மகன்களை அழைத்துச் சென்ற ஜானகிராமன், நர்சரியின் ஒரு பக்கமாகவும், மகன்கள் மற்றொரு பக்கமாக சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென்று ஜானகிராமன் அலறல் சத்தம் கேட்டு மகன்கள் வந்து பார்த்தபோது, பக்கத்து விவசாய நிலத்தில் வனவிலங்குகள் வராமல் தடுக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி துடித்துக்கொண்டிருந்த நிலையில், அவரைக் காப்பாற்றச் சென்ற மகன்களும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu