தமிழ்நாடு
கோயம்புத்தூர் கொள்ளை சம்பவம்.. போலீஸ் விசாரணையில் உத்திரப்பிரதேச கொள்ளை கும்பல் திடுக்கிடும் தகவல்.!
Dec 02, 2025 01:30 AM
110
போலீஸ் விசாரணையில் உத்திரப்பிரதேச கொள்ளை கும்பல் திடுக்கிடும் தகவல்.!
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில், கடந்த 28ஆம் தேதி ஒரே நேரத்தில், 13 வீடுகளில் கொள்ளையடித்து தப்பி, துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட உத்திரப்பிரதேச கொள்ளை கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்திரப்பிரேதசத்தில் இருந்து, கடந்த செப்டம்பர் மாதமே 12 பேர் கும்பலாக புறப்பட்டு வந்த இந்த கொள்ளை கும்பல், மலிவு விலையில் பாத்திரம் விற்பனை செய்வது போல், கோயம்புத்தூரில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளாக நோட்டம் விட்டு, தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டு கல்லு ஆரீஃப், தனது சக கூட்டாளிகள் இருவரோடு, ரயிலில், கோயம்புத்தூர் வந்திருக்கிறான். இதையடுத்தே, ஹவுசிங் யூனிட்டில் கொள்ளையை அரங்கேற்றி, தங்களுக்குள் கொள்ளை பொருளை பிரித்துக் கொண்டு, ஊருக்கு ரயிலில் புறப்படுவதற்காக, தயாராகி கொண்டிருந்தபோதுதான், கோயம்புத்தூர் போலீசார் கொள்ளை கும்பல் தலைவன் உட்பட மூவரை சுட்டுப்பிடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த மூவருக்கு தகவல் அளித்த, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 12 கும்பலையும் பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் இதற்கு முன் இவர்கள் கொள்ளையடித்ததாக வழக்குகள் எதுவும் இல்லாததால், முதல் போணியிலேயே, உத்திரப்பிரதேச கும்பல் சிக்கியிருக்கிறது. இருப்பினும், இந்த உத்திரப்பிரதேச கும்பல் மீது, டெல்லி, உத்தரபிரதேசம், மேகலாயா, உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஏராளமான கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் கூறியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu