ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
மாவட்டம்
14 வயது சிறுமி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கு - கைதானவருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
Nov 29, 2025 11:35 AM
132
14 வயது சிறுமி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கு - கைதானவருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமியின் தலையை துண்டித்து கொலை செய்த நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுநரான தினேஷ்குமார் என்பவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், அச்சிறுமி இது பற்றி தனது தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து 2018 அக்டோபர் 22ல் சிறுமியின் தலையை துண்டித்து அவர் சாலையில் வீசினார்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தினேஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து 2022ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தினேஷ்குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. குற்றம்சாட்டவரின் செயல் கொடூரமானது என்ற போதும், இந்த வழக்கு அரிதிலும் அரிதானது அல்ல என குறிப்பிட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்றும் அவர் சீர்திருத்தத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்றும் கூறி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu