ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து பிரசாரத்தை மீண்டும் துவங்கும் இ.பி.எஸ்.
Nov 28, 2025 10:36 AM
112
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து பிரசாரத்தை மீண்டும் துவங்கும் இ.பி.எஸ்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து தனது மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ள எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் தொடர்பாக அங்கு விரிவாக பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 30ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் இ.பி.எஸ். கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோபியில் அவரது பலத்தை நிரூபிக்கும் வகையில், ஏராளமானோர் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும், அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக அவர் பேசியதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் இ.பி.எஸ். விரிவாக பேச உள்ளதாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu