RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

BIG STORIES

ஆடுகளை வெட்டுவது போல வீச்சரிவாளால் மனைவியின் சகோதரர்கள் கொடூர கொலை..!

Nov 26, 2025 03:56 PM

566

ஆடுகளை வெட்டுவது போல வீச்சரிவாளால் மனைவியின் சகோதரர்கள் கொடூர கொலை..!

ஆடுகளை வெட்டுவது போல வீச்சரிவாளால் மனைவியின் சகோதரர்கள் கொடூர கொலை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே டாஸ்மாக் பாரில் வைத்து இருவர் வீச்சரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சகோதரியை காப்பாற்றிய சகோதரர்களுக்கு நேர்ந்த பரிதாப முடிவு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. 

நாளெல்லாம் அடிபட்டு மிதிபட்டு தவிச்சி கிடக்குறாளே... என்று சகோதரி மீது பரிதாப்பட்ட பாவத்திற்காக இரு சகோதரர்கள் ஆடுகளை போல வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் தான் இவை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் முருகன் (50). மந்திரம் (40). சகோதரர் உறவுமுறை கொண்ட இருவரும் சம்பவத்தன்று இரவு தளவாய்புரம் டாஸ்மாக் பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த உறவினரான 55 வயதான கோமு என்பவர் , தான் கையில் கொண்டு வந்திருந்த வீச்சரிவாளால் , ஆடுகளை வெட்டுவது போல இருவரையும் கொடூரமாக வெட்டிச்சாய்த்தார்

அருகில் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இருவரும் ஒருவர் பின் ஒருவராக பரிதாபமாக உயிரிழந்தனர்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்னாள் ஆயுள் கைதி குடிக்கு அடிமையானதால் நிகழ்ந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இரட்டை கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்படும் கோமு பல ஆண்டுகளுக்கு முன்பே கொலை வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டவர். கணவன் ஜெயிலுக்கு போனாலும் அவரது மனைவி தங்கத்தாய் கூலி வேலைக்கு சென்று தனது மகனை படிக்க வைத்து வளர்த்து வந்தார்.

சிறையில் இருந்து கடந்த வருடம் வெளியே வந்த கோமு, வெளியே வந்த பின்னர் திருந்தாமல் குடி போதையில் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மகனை அடித்து உதைப்பதை வாடிக்கையாக செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இதை அறிந்த தங்கத்தாய்க்கு அண்ணன் உறவுமுறையுள்ள முருகனும், மந்திரமும் , கோமுவை அழைத்து சமரசம் பேசி உள்ளனர். ஆனால் அவர்களின் சமாதானத்தை ஏற்காமல் கோமு மீண்டும் தனது மனைவி மகனை தாக்கி துன்புறுத்தி உள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோமு தனது மகனை கத்தியை எடுத்து குத்தி கொலை செய்ய முயன்றதாகவும், தாயும் மகனும் வீட்டை விட்டு வெளியேறி தனது சகோதரரான முருகனிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது. தினமும் கொடுமையை அனுபவித்து வரும் சகோதரியை காப்பாற்றுவதற்காக , தாயையும், மகனையும் வெளியூருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது

போதை தெளிந்த பின்னர் மனைவி மகனை தேடி அலைந்த கோமுவுக்கு அவர்கள் இருவரும் முருகன் உதவியுடன் வெளியூர் சென்றுவிட்டது தெரியவந்தது. பல முறை இது குறித்து முருகனிடம் கேட்டுப்பார்த்தும் அவர் சகோதரியின் இருப்பிடத்தை தெரிவிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் முருகன், மந்திரம் ஆகியோர் நண்பருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது , கோமு வீச்சரிவாளை எடுத்து வந்து, மனைவியையும் மகனையும் எங்கே ஒளித்து வைத்து இருக்கிறாய் ? என்று கேட்டு இருவரையும் வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஆத்திரத்தால் அறிவிழந்து அரிவாளை எடுத்ததால் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு சென்று திரும்பிய கோமு மீண்டும் கொலை சம்பவத்தை நிகழ்த்தி விட்டு அரிவாளுடன் தலைமறைவாக சுற்றி திரிவதால், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கோமுவின் மனைவி மற்றும் மகனுக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies