பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை
Mar 12, 2026
முகப்பு
"வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, இதற்கு இத்தனை கேமராவா?" திருடன் எழுதி வைத்த கடிதம்
Nov 26, 2025 10:29 AM
175
"வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, இதற்கு இத்தனை கேமராவா?" திருடன் எழுதி வைத்த கடிதம்
திருநெல்வேலி பழையபேட்டையில், வீட்டில் 25 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக மதபோதகர் புகாரளித்த நிலையில், "உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை யாராவது திருட வந்தால் ஏமாறாமல் இருக்க காசு வை என திருடன் எழுதி வைத்து விட்டுச் சென்ற கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.
போதகரான ஜேம்ஸ் பால், தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி அதனை செல்ஃபோன் மூலமாக கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். மகளை பார்ப்பதற்காக மதுரைக்குச் சென்ற நிலையில், கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவை உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பீரோவை உடைத்து உண்டியல் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் இருந்த பர்ஸ் திருடு போனதாக புகாரளித்தார். தடயங்களை போலீஸார் தேடிய போது வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, இதற்கு இத்தனை கேமராவா? என எழுதி வைக்கப்பட்டிருந்த கடித்ததை மீட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu