ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
இந்தியா
அயோத்தி ராமர் கோவில் கொடியில் இத்தனை விஷயங்களா?
Nov 25, 2025 02:35 PM
61
அயோத்தி ராமர் கோவில் கொடியில் இத்தனை விஷயங்களா?
அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள புதிய கொடி கடும் புயலையும் எதிர்கொள்ளும் வலிமை கொண்டதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமர் கோவில் கொடி பத்தடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டு முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டு நூலும், பாராசூட்களில் பயன்படுத்தப்படும் இழைகளையும் கொண்டு, இந்த கொடியை 25 நாட்கள் உழைத்து உருவாக்கி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பட்டும், பாராசூட் இழைகளும் கலந்திருப்பதால் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் கடும் காற்றையும் கொடி தாங்கி நிற்கும். 191 அடி உயர கோபுரத்தில், 41 அடி உயர சுழலும் கொடி கம்பத்தில், நைலான் கயிற்றில் கட்டப்பட்டு கொடியை ஏற்றி உள்ளனர். கொடி, அதனை தாங்கிய கம்பம், கட்டியுள்ள கயிறு என அனைத்தும் சர்வதேச தரத்தில், உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu