RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாடு

பங்குச் சந்தையில் முதலீடு என கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆசாமிக்கு திருமண மண்டபத்தில் மணக்கோலத்திலேயே அடி, உதை..

Nov 25, 2025 01:21 PM

12059

பங்குச் சந்தையில் முதலீடு என கூறி பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆசாமிக்கு திருமண மண்டபத்தில் மணக்கோலத்திலேயே அடி, உதை..

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பங்குச் சந்தை முதலீட்டில் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகக் கூறப்படும் நபருக்குத் திருமணம் நடைபெறுவதை அறிந்து அங்கு சென்ற பாதிக்கப்பட்டவர்கள், மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்தவரை சரமாரியாகத் தாக்கினர்.

பல்லாவரத்தைச் சேர்ந்த கிளிண்டன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான வகுப்பு எடுப்பதாகவும் தான் கூறுவதை கேட்டு முதலீடு செய்தால் பல மடங்கு சம்பாதிக்கலாம் என தனது உறவினர், நண்பர் எனப் பலரையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களில் மோகனப் பிரியா முதலில் 75 லட்சம் ரூபாயை இழந்து, பிறகு விட்டதைப் பிடிக்கலாம் என கிளிண்டன் கூறியதை நம்பி தனது ஆடி காரை விற்று 12 லட்சம் ரூபாயை முதலீடு செய்து அதையும் இழந்துள்ளார். அதன் பின்னரும் அவரது வீட்டுப் பத்திரத்தை அடமானம் பெற்று முதலீடு செய்தும் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து மோகனப் பிரியா கிளிண்டன் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.

இந்த நிலையில், கிளிண்டனுக்குத் திருமணம் நடைபெறவிருப்பதை அறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் மண்டபத்துக்குச் சென்ற மோகனப்பிரியா உள்ளிட்டோர் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த கிளிண்டனின் சட்டை கிழிந்து ரத்தம் கொட்டியது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies