தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
போலி நிறுவனங்களை உருவாக்கி ரூ.350 கோடி ஜி.எஸ்.டி மோசடி - ஒருவர் கைது
Nov 25, 2025 06:12 AM
93
ஜி.எஸ்.டி மோசடி
சென்னையில் போலி நிறுவனங்களை உருவாக்கி சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டு பதிவு செய்யப்படாத நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டுதோறும், தனிநபர் வருமானவரி கணக்குத் தாக்கல் போல், நிறுவனங்களும், ஐடி ரிட்டர்ன் மற்றும் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஏ.எஸ். அசோசியேட்ஸ் என்ற நிறுவனம், போலி ஜிஎஸ்டி விலைப்பட்டியலை கொண்ட, 95 போலி நிறுவனங்களை உருவாக்கி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மோசடியில் ஈடுபட்டிருக்கிறது.
சென்னையில் முதற்கட்டமாக 12 நிறுவனங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 50 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு மோசடி நடைபெற்றிருப்பது, ஜிஎஸ்டி அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எஞ்சிய 83 நிறுவனங்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், GST வரி ஏய்ப்பு மோசடி 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu