ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
ரூ.30 கோடிக்கு ஏலம் போன 339 கிராம் தங்க நாணயம்
Nov 25, 2025 01:38 AM
177
339 கிராம் தங்க நாணயம்
ஸ்பெயின் மன்னர் மூன்றாம் பிலிப் ஆட்சிக் காலத்தில் 1609-ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு பெரிய தங்க நாணயம், 30 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
339 கிராம் எடை கொண்ட அந்த நாணயத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள நியூமிஸ்மாடிகா ஏல நிறுவனம் ஏலம் விட்டது. 30 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதையடுத்து, ஐரோப்பாவில் அதிக தொகைக்கு ஏலம் போன நாணயம் என்ற பெருமையைப் பெற்றதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன இந்த நாணயம், 1950-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன், ரோமானியப் பேரரசர் ஃபெர்டினாண்ட்-III-க்குச் சொந்தமான 100 டகட் நாணயம் 22 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே அதிகபட்சமாகும்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu