RECENT NEWS

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

சினிமா

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. அவருக்கு வயது 89..!

Nov 24, 2025 04:45 PM

55

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. அவருக்கு வயது 89..!

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. அவருக்கு வயது 89..!

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகரும், பாஜக எம்பி ஹேமமாலியின் கணவருமான தர்மேந்திரா காலமானார்.. அவருக்கு வயது 89...

உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனது வீட்டிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். 'ஷோலே', 'தரம் வீர்' 'தோஸ்த்', உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் தர்மேந்திரா நடித்துள்ளார்.

கடைசியாக 2023 ஆம் ஆண்டில், கரண் ஜோஹர் இயக்கிய 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் தர்மேந்திரா நடித்து இருந்தார்.

தர்மேந்திராவின் இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், அமிர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சல்மான்கான், சலீம்கான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்த பின் தர்மேந்திரா உடல் தகனம் செய்யப்பட்டது.

2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மக்களவை எம்பியாக தர்மேந்திரா பதவி வகித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. தர்மேந்திரா மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies