மாவட்டம்
முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் புலி தாக்கி 60 வயது பெண் உயிரிழப்பு
Nov 24, 2025 12:42 PM
23
முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் புலி தாக்கி 60 வயது பெண் உயிரிழப்பு
உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் புலி தாக்கி 60 வயது பெண் உயிரிழந்தார்.
மாவனல்லா பகுதியைச் சேர்ந்த நாகியம்மாள் என்பவர் வழக்கம் போல் தனது கால்நடைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த புலி, நாகியம்மாளை ஆக்ரோஷத்துடன் தாக்கி கொன்று உடலை புதர் பகுதிக்குள் இழுத்துச் சென்றதை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் நாகியம்மாளின் உடலை மீட்டனர். புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu