RECENT NEWS

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

கணவனை கல்லாலேயே அடித்துக் கொன்று 70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

தமிழ்நாடு

2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 6பேர் ப*.. விபத்துக்கான காரணம் என்ன?..

Nov 24, 2025 09:55 AM

59

2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 6பேர் ப*.. விபத்துக்கான காரணம் என்ன?..

2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 6பேர் ப*.. விபத்துக்கான காரணம் என்ன?..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த எம்.ஆர்.கோபாலன் என்கிற பேருந்தும், தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர் என்கிற பேருந்தும் இடைகால் அருகே நேருக்கு நேர் மோதியது. அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த எம்ஆர் கோபாலன் என்ற பேருந்து, தடம் மாறி எதிரே வந்த கேஎஸ்ஆர் பேருந்து மீது மோதியதே விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ் சாலையில் நேரிட்ட விபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 40 பேர் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். விபத்தை அடுத்து, கே எஸ் ஆர் என்ற தனியார் பேருந்து உரிமத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ரத்து செய்துள்ளார். இந்த பேருந்து தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies