தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா இடையே புதிய முத்தரப்பு கூட்டுறவு
Nov 23, 2025 01:06 AM
48
இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா இடையே புதிய முத்தரப்பு கூட்டுறவு
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா இடையே ஒரு புதிய முத்தரப்பு தொழில்நுட்பம் மற்றும் புதுமை கூட்டாண்மை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ் பர்க் நகரில் நடைபெறும் ஜி -20 மாநாட்டின் போது, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின், ஆஸ்திரேலியா-கனடா-இந்தியா தொழில்நுட்பம் மற்றும் புதுமை (ACITI) கூட்டாண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக அவர் தமது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த முயற்சி மூன்று கண்டங்கள் மற்றும் மூன்று பெருங்கடல்களில் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என்றும், விநியோகச் சங்கிலிகளின் பல்வகைப்படுத்தலை ஆதரிக்கும் என்றும், சுத்தமான எரிசக்தி மற்றும் AI தொழில் நுட்பத்தை பெருமளவில் ஏற்றுக்கொள்வதை ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu