முகப்பு
நிலத்தகராறில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தி.மு.க நிர்வாகி கைது..!
Nov 22, 2025 12:31 PM
26
நிலத்தகராறில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தி.மு.க நிர்வாகி கைது..!
தேனி மாவட்டம் பாலார்பட்டியில், நிலத்தகராறில் எதிர்தரப்பினரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு உரிமம் இல்லாமல் அவர் வைத்திருந்த ரிவால்வர் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்ட அயலக அணி அமைப்பாளரான ரவியின் உறவினரான சத்யாவிற்கும் அப்பகுதியைச் சேர்ந்த மணவாளன் மற்றும் ராமசாமிக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் பஞ்சாயத்து பேசுவதற்காக வந்த ரவி துப்பாக்கியை எடுத்து மிரட்டிய நிலையில் மற்றவர்கள் சமாதானம் பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மணவாளன் அளித்த புகாரில் ரவி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ரவியின் கார் ஓட்டுநரான சிவசக்தி புகாரில் எதிர் தரப்பினர் 5 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu