ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
ஆலப்புழாவில் இருந்து சென்னை வந்த ரயிலில் தனியாக இருந்த பச்சிளம் குழந்தை..!
Nov 22, 2025 10:01 AM
87
ஆலப்புழாவில் இருந்து சென்னை வந்த ரயிலில் தனியாக இருந்த பச்சிளம் குழந்தை..!
கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து இன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக இருந்த சுமார் ஒரு வயது பெண் குழந்தையை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு குழந்தைகள் உதவி மையத்திடம் ஒப்படைத்தனர்.
கோவையை கடந்து ரயில் சென்ற போது எஸ்7 பெட்டியில் குழந்தை தனியாக இருப்பதை கண்ட டிக்கெட் பரிசோதகர் அங்கு குழந்தையின் பெற்றோரை காணாததால் சென்னை ஆர்.பி.எப். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
குழந்தையின் பெற்றோர் யார்?குழந்தையை விட்டுச் சென்றது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu