ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
முகப்பு
கூட்டத்திற்கு வரும் மக்களின் பாதுகாப்பிற்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு... சென்னை உயர் நீதிமன்றத்தில் நகல் தாக்கல் செய்தது தமிழக அரசு
Nov 21, 2025 02:30 PM
72
சென்னை உயர் நீதிமன்றத்தில் நகல் தாக்கல் செய்தது தமிழக அரசு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினரே பொறுப்பு என, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிந்த நிலையில், இது தொடர்புடைய வழக்கில் அரசியல் கூட்டங்களை நெறிபடுத்த வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய தமிழக அரசு, நிலையான வழிகாட்டு விதிகளின் வரைவு நகல்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி கோரும் கட்சியினர் கூட்டத்தில் எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள், எத்தனை வாகனங்கள் வரும், பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும் எனவும், தலைவர்கள் ரோடு ஷோ, பொதுக்கூட்டம் தொடங்கும் இடம் மற்றும் முடிக்கும் இடத்தை குறிப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்சாரக் கூட்டங்கள் என்றால் 10 நாட்களுக்கு முன்பும், 50 ஆயிரத்திற்கு மேல் திரளும் மாநாடு என்றால் 30 நாட்களுக்கு முன் அனுமதி கோர வேண்டும் என வரைவு வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணையை நவம்பர் 27-ம் தேதி ஒத்திவைத்த உயர் நீதிமன்றம், மனுதாரர்களான அதிமுக, த.வெ.க, உள்ளிட்ட கட்சிகளுக்கு வரைவு வழிகாட்டு விதிகள் நகல்களை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu