தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
மழைநீர் வடிகால்வாய் அமைக்க ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் தானம் வழங்கிய குடும்பம்
Nov 21, 2025 04:15 AM
101
அரசுக்கு நிலத்தைத் தானமாக வழங்கிய குடும்பத்தினருக்குப் பாராட்டு விழா
திருப்பூரில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கிய குடும்பத்தினருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் முறையான வடிகால் இல்லாததால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மழைநீர் வடிகால் அமைக்க இடம் இல்லாததால் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காமல் இருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி வள்ளியம்மாள் குடும்பத்தினர் வடிகால்வாய் அமைக்க நிலம் வழங்கியுள்ளனர். அவர்கள் பூரண கும்ப மரியாதையுடன், இசை நடனம் சகிதமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு மாநகராட்சி மேயர் சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu