கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
தமிழ்நாடு
பிரம்படியை விட ஆபத்தான செயலைச் செய்த 3 ஆசிரியைகள்.. 9 ஆம் வகுப்பு மாணவி மரணம்..! அதிகாரிகள் எடுக்கணும் ‘சாட்டை’யை..!
Nov 21, 2025 02:22 AM
566
பிரம்படியை விட ஆபத்தான ஆசிரியைகளின் செயல்.. 9 ஆம் வகுப்பு மாணவி மரண அதிர்ச்சி வாக்குமூலம் ..!
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில், 3 ஆசிரியைகள் செய்த செயலால், 9 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டிய ஆசிரியர்களே, இப்படி நடந்துகொள்ளலாமா? என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழும்பும் அளவுக்கு, அவர்கள் செய்த ஆபத்தான செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில், 9 ஆம் வகுப்பு படித்து வந்தார், மாணவி முத்து சஞ்சனா. இவர், பள்ளிக்கு செல்லும்போதே, “நீ என்ன கிழவியா? இப்படி தலை சீவிக்கிட்டு வந்திருக்க?” என 1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்புவரை உள்ள அத்தனை மாணவர்கள் முன்னிலையிலும் ஆங்கில ஆசிரியை சியாமளாதேவி அவமானப்படுத்தியதாகவும் இதனால், மாணவர்கள் இதைப்பார்த்து கேலியாக சிரித்ததாகவும் மாணவி முத்து சஞ்சனா குற்றம் சாட்டியுள்ளார். இதனால், தனக்கு அவமானமாக இருந்ததாகவும் மரணத்தருவாயில் வருத்ததோடு கூறியுள்ளார், முத்து சஞ்சனா. அதோடு விடாத ஆங்கில ஆசிரியை சியாமளாதேவியோ தொடர்ந்து மாணவியை கேலி செய்யும் விதமாக பேசி வந்துள்ளார். மேலும், நன்றாக படிக்கக்கூடிய முத்து சஞ்சனாவை படிப்பு குறைவாக இருக்கும் மாணவர்களோடு உட்காரவைத்து எழுதவைத்ததாகவும் மன வருத்ததோடு கூறியுள்ளார். இதோடு, முத்துசஞ்சனாவுக்கு பிரச்சனை நின்றுவிடவில்லை.
இரண்டு நாட்கள் முத்து சஞ்சனா விடுப்பு எடுத்துள்ளார். அப்போது, வீட்டுப்பாடம் செய்துவிட்டீர்களா? என தமிழாசிரியை ரமணி பாய் கேட்க, விடுப்பு எடுத்ததால் வீட்டுப்பாடம் எழுதவில்லை என கூறியுள்ளார். ஆனால், இதனைக்கூட புரிந்துகொள்ள முடியாத தமிழாசிரியை ரமணி பாய், மாணவி முத்து சஞ்சனாவை முட்டி போட வைத்து ‘என்னையே நான் ஏமாத்திக்கிறேன்‘ அப்படின்னு சொல்லி. எனக்கு கோபம் வர்ற வரை சொல்லிக்கிட்டே இரு என டார்ச்சர் செய்ததாகவும் மாணவி குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கன்னத்திலேயே நான்கைந்து முறை அறைந்து கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், அறிவியல் ஆசிரியை சிந்தியாவும் இவர்களோடு கூட்டு சேர்ந்து டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. “நீ நல்லாவே படிக்கல. போன தடவையைவிட இந்த தடவை மார்க் கம்மி. பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்குல உங்கம்மாக்கிட்ட சொல்லப்போறேன்” என மிரட்டியதாகவும் இதனால், தனது அம்மா பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கில் வந்து கலந்துகொண்டால், தன்னைப்பற்றி அறிவியல் ஆசிரியை சொல்லிவிடுவார் என பயந்துபோய் தவறான முடிவை எடுத்ததாக மரணத்துக்கு முன் கூறியது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடைசியாக சொல்லி முடிக்கும்போதுகூட ஆங்கில ஆசிரியை தன்னை மிகவும் டார்ச்சர் செய்ததாக கூறி முடிக்கிறார்.
இந்தநிலையில், கடந்த 10 ஆம் தேதி தவறான முடிவை எடுத்த மாணவி
சிகிச்சை பலனின்றி 19 ஆம்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். 3 ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்த நிலையில், ஆங்கில ஆசிரியை சியாமளாதேவி, தமிழாசிரியர் ரமணி பாய் மற்றும் அறிவியல் ஆசிரியை சிந்தியா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பொதுவாகவே, சில ஆசிரியைகள் சில மாணவர்கள் மீது கோபம் கொண்டால், அதை சக ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படி, பகிர்ந்துகொள்ளும்போது சக ஆசிரியர்களும் சேர்ந்துகொண்டு மாணவர்களை பழிவாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அப்படித்தான், மாணவி முத்து சஞ்சனா மீது ஏதோ ஒரு காரணத்திற்காக கோபப்பட ஆரம்பித்து மூன்று ஆசிரியைகளும் ஒன்று சேர்ந்து உளவியல் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்படி, சக மாணவர்கள் மத்தியில் கேலி, கிண்டல் செய்து அவமானப்படுத்துவது மாணவர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிரம்படியைவிட ஆபத்தானது, இந்த உளவியல் தாக்குதல். மாணவர்களின் மனதை புரிந்து நடந்துகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் படம்தான் சமுத்திரகனி நடித்த ‘சாட்டை’ திரைப்படம். இதுபோன்ற, ‘சாட்டை’ களை ஆசிரியர்களுக்கு பாடமாக எடுக்கவேண்டும். அப்போதுதான், மாணவர்களின் உளவியலை புரிந்து நடந்துகொள்வார்கள். ஆசிரியர்களுக்கு தேவை பிரம்பு அல்ல, ‘சாட்டை’ தான் என்கிறார்கள், சமூக ஆர்வர்கள்.
கட்டுப்பாடற்ற அதிகாரத்தில் செய்தாலும்... பொறுப்பற்ற பணியில் செய்தாலும் ... குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu