RECENT NEWS

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்தது

Feb 09, 2026

முகப்பு

2016-ல் தாய்-மகளை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கு - 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Nov 20, 2025 02:27 PM

64

2016-ல் தாய்-மகளை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கு - 3 பேருக்கு ஆயுள் தண்டனை

3 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை அருகே நகைக்காக தாய் - மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு பெண்கள் உட்பட 3 பேருக்கு ஆறு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பகுதியில் மூதாட்டி வசந்தா அவரது மகளும் ஆசிரியையுமான தேன்மொழியும் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொலைக் கும்பல், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தறுத்துச் சென்றனர். காயத்துடன் உயிர் தப்பியச் சிறுமி 9 மாதக் குழந்தையான தனது தங்கையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு கதவை தட்டியதால் படுகொலை சம்பவம் தெரியவந்தது.

இச்சம்பவத்தில் பதிவான கைரேகைகளை வைத்து, தேன்மொழி வீட்டில் வேலை செய்த பெண் சத்யா, தவ்லத்பேகம், இவர்களின் ஆண் நண்பர் ஜெயக்குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மூன்று பேருக்கும் 6 பிரிவுகளின் கீழ் ஆறு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீப்தி அறிவுநிதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies