ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
பிரதமர் உரையின் ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் - முதல்வர்
Nov 20, 2025 10:44 AM
111
ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் - முதல்வர்
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு நிராகரித்துள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? என்றும் முதலமைச்சர் வினவியுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் பிரதமருக்கு தெரியவில்லை? என்றும் சாடியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய மத்திய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஈரப்பத அளவை அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும்? என்றும் முதமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடனடியாக தமிழ்நாடு அரசின் கோரிக்கையை பரிசீலித்து, கொள்முதலுக்கான நெல்லின் ஈரப்பத அளவில் தளர்வளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu