தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
"கேரள அரசின் மோசமான முன்னேற்பாடுகளால் ஐயப்ப பக்தர்கள் சிரமம்" - அண்ணாமலை குற்றச்சாட்டு
Nov 20, 2025 10:37 AM
56
அண்ணாமலை குற்றச்சாட்டு
கேரள கம்யூனிஸ்ட் அரசின் அலட்சியத்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் தவிர்க்க முடியாத சிரமங்களை அனுபவித்து வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரள அரசின் மோசமான முன்னேற்பாடுகள் மற்றும் தவறான நிர்வாகத்தால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக குற்றஞ்சாட்டிள்ளார்.
ஒருபுறம் ஐயப்ப பக்தர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் போதுமானதாக இல்லை என்றும், மறுபுறம் ஐயப்ப சேவா சங்கம், அமிர்தானந்தமயி மடம், சுப்பிரமணிய மத அறக்கட்டளையின் தன்னார்வ சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
சபரிமலை வெறும் புனித யாத்திரை செல்லும் இடம் மட்டுமல்ல, நாட்டின் லட்சக்கணக்கான மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக தலம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், மாநில அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu