மாவட்டம்
வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்.. விடிய விடிய தேடியும் குண்டுமணி தங்கம் கூட கிடைக்காததால் ஏமாற்றமடைந்தவர்கள் செய்த செயல்..!
Nov 19, 2025 12:09 PM
29
வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்.. விடிய விடிய தேடியும் குண்டுமணி தங்கம் கூட கிடைக்காததால் ஏமாற்றமடைந்தவர்கள் செய்த செயல்..!
சிவகங்கை காளையார்மங்கலம் புதுவளவு கிராமத்தில் பழைய செட்டி நாட்டு பங்களா போன்ற வீட்டுக்குள் நகை பணம் ஏராளமாக இருக்கும் என்று நுழைந்த 6 முக மூடி கொள்ளையர்கள், இரவு முழுவதும் தேடியும் குண்டுமணி தங்கம் கூட கிடைக்காததால் வீட்டில் வசித்து வந்த மூதாட்டி அணிந்திருந்த 5 சரவன் நகைகளை மட்டும் பறித்துச்சென்றனர்.
முதியவர் முருப்பன் என்பவர் தனது மனைவி மீனாட்சியுடன் அந்த பங்களா வீட்டில் வசித்து வந்த நிலையில் கொள்ளையர்கள் முகப்பனை கட்டிபோட்டு மீனாட்சியை மிரட்டி பீரோ சாவியை வாங்கி திறந்து பார்த்துள்ளனர். அதில் எந்த ஒரு நகையையும் இல்லை. கொள்ளையர்களுக்கு பயந்து நகைகளை எல்லாம் வங்கி லாக்கரில் வைத்திருப்பதாக கூறியதால், தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த மிளாகாய் பொடியை தூவி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu