தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
தமிழ்நாடு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக சிறப்பு ஏற்பாடு..! 5284 சிறப்பு பேருந்துகள், 30 சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை..
Nov 18, 2025 09:37 AM
48
5284 சிறப்பு பேருந்துகள், 30 சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை..
கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வரும் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கும் நிலையில், டிசம்பர் 3 ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெற உள்ளது.
விழா நாள் அன்று 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 1060 இடங்களில் சிசிடிவி கேமிரா அமைத்து கண்காணிக்க உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு 4764 சிறப்பு பேருந்துகளும், வெளி மாநில பக்தர்களுக்காக 520 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன என்றும்,
ஏற்கனவே 14 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கூட்டத்தில் வேலூர் சரக டி ஐ ஜி தர்மராஜன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu