தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
முகப்பு
பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு
Nov 17, 2025 02:22 AM
55
பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனாவிற்கு எதிரான வழக்கில் அந்நாட்டின் சிறப்பு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலவரம் செய்யும் நோக்குடன் செயல்படுபவர்களை கண்டதும் சுடுவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்தாண்டு ஜூலையில் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதனால், உயிருக்கு பயந்து ஷேக்ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, இந்த போராட்ட வழக்கில் சிறப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறது, அதில், ஷேக்ஹசீனாவிற்கு தூக்கு தண்டனை விதிக்க கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu