சற்றுமுன்
காவல் நிலையத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
Nov 17, 2025 01:14 AM
80
காவல் நிலையத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பெண் ஒருவர் தனது 6 வயது மகளுடன் காவல் நிலையத்தில் வைத்து உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டார்.
தோழகவுண்டர் வட்டத்தைச் சேர்ந்த மலர்கொடிக்கும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கடந்த 2 மாதத்திற்கு முன்பு மலர்கொடி புகார் அளித்திருந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் புகார் அளிக்கச் சென்ற போது, மறுநாள் வந்து விசாரிப்பதாக போலீஸார் கூறியதாக தெரிகிறது.
எனவே, அவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu