தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
முகப்பு
அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்கு
Nov 16, 2025 09:38 AM
88
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி புகார்
அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி மீது மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பையனூரைச் சேர்ந்த தனசேகரன் என்பவரின் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரண்டரை கோடி ரூபாயை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன் எனக் கூறி சொத்து ஆவணங்களைக் கொடுத்த கலாநிதி, பிறகு அந்த ஆவணங்கள் தொலைந்துபோய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனசேகரன் தகவல் தெரிவித்ததையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu