முகப்பு
சீனாவில் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் வளாகத்தில் தீ விபத்து
Nov 16, 2025 01:28 AM
35
சீனாவில் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் வளாகத்தில் தீ விபத்து
சீனாவின் ஜியாங்சு மாகாணம் ஜாங்ஜியாகாங் பகுதியில் உள்ள பெங்ஹுவாங் மலையில் ஆயிரத்து 500 ஆண்டுகால பழமையான கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மூன்று மாடி கோவிலில் சுற்றுலா பயணி ஏற்றிய தூபக் குச்சிகளால் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மூன்று மாடி கட்டிடத்தின் மேலிருந்து கீழ் பகுதி வரை தீ மளமளவென பரவியது.
கோவிலில் ஏற்பட்ட தீ , அதிர்ஷ்டவசமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள வனப்பகுதிக்கு பரவவில்லை. இங்கு மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu