RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..! யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!

Nov 15, 2025 01:29 PM

263

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..! யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதை அந்த கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அலிநகர் தொகுதியின் வெற்றி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

அதற்கு காரணம் 25 வயதே ஆன 2கே தலைமுறையை சேர்ந்த மைதிலி தாகூர், அலிநகர் தொகுதியில் வெற்றி பெற்று, இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார். யார் இந்த மைதிலி தாக்கூர்? அரசியலுக்குள் நுழைந்தது எப்படி? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பீகார் மாநிலம் மதுபானியில் 2000 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் தேதி மைதிலி தாகூர் பிறந்தார். 4 வயதில் இருந்தே மைதிலி தாகூர் தனது தாத்தாவிடம் இருந்து பாடல் கற்று கொண்டு வந்துள்ளார். 6 வயதில் மைதிலி தாகூரின் பாடும் திறமையை அறிந்த அவரது தந்தை, மகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே குடும்பத்தோடு டெல்லிக்கு குடிபெயர்ந்தார்.

நாட்டுப்புறப்பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடி வந்த மைதிலி தாகூர், 11 வயதிலேயே தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்றார். அதில் சில விருதுகளையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருக்கு பாலிவுட்டில் பாடல்கள் பாட வாய்ப்புகள் கிடைத்த நிலையில், இவரின் பாடல்கள் வைரலாக பரவி பிரபலமாக மாறினார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப் பிறகு இந்தி திரைப்பட இசையிலிருந்து விலகுவது குறித்தும், பாலிவுட் சினிமாயை அநீதியான கலாச்சாரம் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார். பின்னர் சில வருடங்கள் கழித்து அஜய் தேவகன் படத்திற்கு மைதிலி தாகூர் பாடல் பாடி மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

மைதிலி தாகூர் என்ற யூடியூப் தள பக்கத்தை உருவாக்கி அதில், நாட்டுப்புறப்பாடல்களையும், பக்தி பாடல்களையும் அவர் தொடர்ந்து பாடி வந்தார். யூடியூபில் இவர் 5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை வைத்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் நடந்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு மைதிலி தாகூரை தேடி வந்தது. அதில் பங்கேற்று பக்தி பாடல்களை உருக்கமாக பாடி பலரது மனங்களில் இடம் பிடித்தார்.

2024 ஆம் ஆண்டிற்கான கலாச்சார தூதர் விருதை, இந்திய பிரதமர் மோடியின் கைகளால் வாங்கினார் மைதிலி தாகூர். பின்னர் மைதிலி தாகூர் அரசியலில் நுழைந்து, தன்னை பாரத ஜனதா கட்சியிலும் இணைத்து கொண்டார்.

பீகார் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கான இரண்டாம் கட்ட பட்டியலை பாஜக அறிவித்தபோது, அதில் மைதிலி தாகூர் இடம் பெற்றார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அலிநகர் தொகுதியில் மைதிலி தாகூர் போட்டியிட்டார். அவர் 63 வயதான அரசியல் அனுபவம் மிக்க ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த பினோத் மிஸ்ராவை எதிர்த்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே, வெற்றி தோல்வியை தாண்டி என் மக்களின் உள்ளங்களை நான் சம்பாதித்து உள்னேன் என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் நான் வாக்கு கேட்டு சென்றபோது தெரியவந்ததாக மைதிலி தாகூர் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

தற்போது வாக்கு எண்ணிக்கைகள் வெளியான நிலையில், 11,730 வாக்கு வித்தியாசத்தில் மைதிலி தாகூர் வெற்றி பெற்று, அலிநகர் தொகுதியின் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். இந்த வெற்றி மூலம் இவர், இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


இந்த வெற்றி குறித்து பேசிய மைதிலி தாகூர், "இது எனக்கு கனவு போன்று உள்ளது, மக்கள் என் மேல் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளார்கள், என் தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன், என் தொகுதி மக்களுக்காக அவர்களது மகளாக சேவை செய்வேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies