RECENT NEWS

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

முகப்பு

‘காமெடி வித்தையில் கம்யூனிச சித்தாந்தம்’ வி.சேகர் காலமானார்..! இயக்குனரின் திடீர் உயிரிழப்பு ஏன்?

Nov 15, 2025 06:22 AM

222

‘காமெடி வித்தையில் கம்யூனிச சித்தாந்தம்’ வி.சேகர் காலமானார்..! இயக்குனரின் திடீர் உயிரிழப்பு ஏன்?

வி.சேகர் காலமானார்..!

தமிழ் திரையுலகில் கம்யூனிச சித்தாந்தங்களை காட்சிகளாலும், வசனங்களாலும் ரசிகர்களின் மனதில் விதைத்த குடும்பப்பட இயக்குனர் வி.சேகர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. சினிமா, அரசியல், குடும்ப கதைகளில் தனது வசனங்களை காமெடியாக சொல்லி மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றவரின் வாழ்க்கை பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

தமிழக மக்கள் சுய ஒழுக்கமில்லா சினிமா நடிகர்கள் மீது கொண்டுள்ள முரட்டுத்தனமான ரசிக மோகத்தை முதன் முதலாக வெள்ளித்திரையில் தோலுரித்த பெருமைக்கு சொந்தக்காரர் வி சேகர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல் வாதிகள் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதை காட்சிகளாக்கிய அசல் கம்யூனிச போராளி தோழர் வி சேகர்.

திருவண்ணாமலை அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட வி சேகர். மாநகராட்சி சுகாதார துறையில் மலேரியா ஒழிப்பு பணியாளராக வேலைக்கு சேர்ந்தவர், மாலை நேரத்தில் நந்தனம் கலை கல்லூரியில் பி.ஏவும், பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. பட்டப்படிப்பையும் முடித்தார். உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை படித்து தன்னை மேம்படுத்திக் கொண்டார். கே.பாக்யராஜின் உதவியாளராக இரண்டு ஆண்டுகள் கதை இலாகாவில் பணியாற்றி , நடிகர்களின் செயல்பாடுகளை அறிந்ததன் தொடர்ச்சியாக 1990 ஆம் ஆண்டு சினிமா முன்னனி நாயகர்களின் அலப்பறைகளை காட்சிகளாக்கி அவரது ரசிகர்களை கதறவிட்டவர் வி சேகர்.

வி சேகரின் ‘ நான் புடிச்ச மாப்பிள்ளை; படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் , தெலுங்கு ,இந்தி , ஒடிசா மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் மனைவி சொல்வதையும் கணவன் கேட்க வேண்டும் என்பதை ஆண்களின் பொது புத்தியில் உறைக்கும்படி சொன்னது 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' என்ற படம்.

ஒன்னா இருக்க கத்துக்கனும் படம் மூலம் சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை கல்வியால் மட்டுமே அகற்ற முடியும் என்று நகைச்சுவையாக பாடம் நடத்தினார் வி சேகர்.

வரவு எட்டணா செலவு பத்தணா படத்தில் லோக்கல் அரசியல் வாதிகள் செய்யும் அடாவடிகளை, கவுண்டமணியை வைத்து காட்சிகளாக்கி கலக்கி இருப்பார் விசேகர்.

'காலம் மாறிப் போச்சு', படத்தில் பெண்ணுரிமை புரட்சி செய்தார் வி சேகர். இந்த படத்தில் இருந்து தான் வடிவேலுவின் காமெடி வெகுஜன ரசிகர்களை கவர்ந்தது.

'விரலுக்கு ஏத்த வீக்கம்' படத்தின் மூலம் நடுத்தர குடும்ப ஆண்களின் அலைபாயும் மனதையும், 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' படத்தின் மூலம் கூட்டு குடும்ப வாழ்க்கையில் உள்ள நன்மைகளையும் ரசிகர்களுக்கு உணர்த்தினார்.

திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் மூலம் சரத்குமார் நடிப்பில் 'ஏய்' என்ற ஆக்சன் படத்தையும் தயாரித்தார். தங்கர்பச்சான் இயக்கத்தில் 'பள்ளிக் கூடம்' படத்தில் கல்வி அதிகாரியாக நடித்தார். தனது மகன் காரல் மார்க்ஸ் நடிப்பில் 'சரவண பொய்கை' என்கிற படத்தை தயாரித்து இயக்கியதால் சில பொருளாதா சிக்கல்களையும் சந்தித்தார்.

கடந்து பத்து நாட்களுக்கு மேலாக உடல் நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி சேகர் வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அவரது உடல் நாளை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு திரையுலகினர் அரசியல் பிரமுகர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். உடலால் மறைந்தாலும், அவரது சிந்தனையில் உருவான சினிமா காட்சிகளால் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார் வி.சேகர்..!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies